ராமநாதபுரம்: இலங்கை, கிளிநொச்சி சிறப்பு அதிரடி படையினருக்கு, தமிழகத்தில் இருந்து கடல் வழியாக கஞ்சா கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. கவுதாரிமுனை கடற்கரை அருகே உள்ள தொடுவாய் பகுதியில் மறைந்திருந்த போது, டூ வீலரில் சந்தேகப்படும்படி மர்ம நபர் ஒருவர் மூட்டைகளுடன் வந்தார்.
சிறப்பு அதிரடிப்படையினர் அவரை தடுத்து நிறுத்த முயன்ற போது, அந்த நபர் டூ வீலரை விட்டு அங்கிருந்து தப்பினார். வாகனத்தில் இருந்த மூட்டையில் 38 பொட்டலங்களில், 75 கிலோ கஞ்சா இருந்தது. டூ வீலர் பதிவு எண் அடிப்படையில் போலீசார், சிறப்பு அதிரடி படையினர் விசாரிக்கின்றனர். பிடிப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 6 லட்சம் ரூபாய்.
இந்நிலையில், தமிழகத்தில் இருந்து கடல் வழியாக கடத்திச் சென்ற 40 மூடைகளில் 1287 கிலோ பீடி இலை பண்டல்கள் மன்னார் மாவட்டம் கீரி கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி கிடந்தன. இலங்கை கடற்படையினர் பீடி இலை பண்டல்களை மன்னார் கடற்படை தளத்திற்கு எடுத்துச் சென்று விசாரிக்கின்றனர்.







