சற்று முன் யாழ்ப்பாணம் கொடிகாம பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக ரயிலுடன் மோதி வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி புறப்பட்ட புகையிரதமும், கடவையை கடக்க முற்பட்ட KDH வானும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும் விபத்தின் போது வானின் பின் புறம் சேதத்துக்கு உள்ளாகியுள்ளதுடன் எந்த வித உயிர் சேதங்களும் இல்லை எள தகவல் வெளியாகியுள்ளது