ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்!

ஒக்டோபர் 7ஆம் திகதி ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் நோக்கில் ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் நேரடி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஈரானின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளது.