நடிகை வனிதா விஜயகுமார் தனது 4 ஆவது திருமணம் குறித்து வெளியிட்டுள்ள அதிரடியான பதிவு தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது.
வனிதா விஜய்குமார்
தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவரும் மிகப் பெரிய திரைக்குடும்பத்தைச் சேர்ந்தவரும் தான் இந்த வனிதா விஜய்குமார்.
இவர் தமிழ் சினிமாவில் நடித்தது சில படங்கள் என்றாலும் இவரின் பெயரை கேட்டாலே ரசிகர்கள் குஷியாகிவிடுகின்றனர்.
முதல் படமே தளபதியுடன் சந்திரலேகா எனும் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியிருந்தார். திருமணத்துக்குப் பின்னர் நடிப்பை கைவிட்டார்.
வனிதா கடந்த 2000ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஸ்ரீஹரி மற்றும் ஜோவிதா என்று இரு பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
ஆகாஷை விவாகரத்து செய்த அவர் ஆனந்த் என்ற தொழிலதிபரை மணந்தார். இவருக்கு பிறந்தவர் தான் ஜெயனிதா. எனினும் மகன் விஜய ஹரியை தந்தையுடன் இருக்க நீதிமன்றம் அனுமதித்தது. அதனால் அவர் வனிதாவை விட்டு விலகி தந்தையுடன் வளர்ந்து வருகிறார்.
இதனிடையே பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானார் வனிதா. தனது 3-வது திருமணம் மூலம் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் வனிதா. 2020-ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் அவருடன் ஏற்பட்ட மோதலால் அவரை விட்டு பிரிந்துவிட்டார். இதுதவிர சில காதல், சர்ச்சைகளில் சிக்கிய வனிதா, அதிலிருந்து மீண்டு.தற்போது திரையுலகில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து யூ டியூப் சேனல்களுக்கு விமர்சனம் செய்து வந்தார். இறுதியில் இவர் நடிப்பில் வெளியான அந்தகன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் வனிதா விஜயகுமாரிடம் அடுத்த திருமணம் குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு பதிலளித்த வனிதா எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கூறியுயிருந்தமை அண்மையில் இணையத்தில் வைரலானது.
அவர் கூறியதை போலவே யாரும் எதிர்பாராத விதமாக வனிதா விஜயகுமார் பிக்பாஸ் புகிழ் ராபட் மாஸ்டரை காதலிப்பதாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த பதிவு இணையத்தில் அசுர வேகத்தில் பரவி வருகின்றது.