அதிக கோபத்தால் காதலை இழக்கும் ஆண் ராசியினர்

ஜோதிட சாஸ்த்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவரின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் நேர்மறை மற்றும் எதிர்மறை குணங்களில் ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின்னர் துணையிடம் அதிக கோபத்தை காட்டுபவர்களாக இருப்பார்கள். இவர்களின் குணம் துணைக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.

இப்படி துணையின் பொறுமைக்கு சவால்விடும் அளவுக்கு அதிக கோபத்தை வெளிப்படுத்தும் ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசியில் பிறந்த ஆண்களின் மனநிலை எப்போதும் ஒரு நிலையில் இருப்பதில்லை. இவர்கள் இயல்பிலேயே அதிகமாக உணர்ச்சிவசப்படும் தன்மையில் இருப்பார்கள்.

இவர்கள் அதிகமாக தங்களின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பதால், துணையின் ஆசைகளை நிறைவேற்றுவதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

இவர்களுக்கு இயல்பிலேயே காணப்படும் ஆக்குரோசமான உணர்வின் காரணமாக திருமண உறவில் அதிகளவில் மோதல்களை ஏற்படுத்தும்.

சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்த ஆண்கள் பெரும்பாலும் மற்றவர்களை அடக்கியாளும் தன்மையில் தான் இருப்பார்கள்.

இவர்கள் எப்போதும் தங்களின் ஆசைகள் மற்றும் லட்சியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதன் காரணமாக துணையின் மனதை புண்படுத்துகின்றனர்.

அவர்களின் ஆணவமும் ஈகோவும் உறவில் அடிக்கடி அதிகாரப் போட்டிகளை தோற்றுவிக்கும் தன்மையில் இருக்கும்.

இவர்கள் தங்கள் துணையிடம் அதிக கோபத்தை வெளிப்படுத்துவதால் அடிக்கடி பிரச்சினைகளை அனுபவிக்கின்றனர்.

தனுசு
தனுசு ராசியில் பிறந்த ஆண்கள் உளக்கிளர்ச்சி கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் விருப்பம் நிறைவேறாத பட்சத்திலும், அவர்களின் சுதந்திரம் பாதிக்கப்படும் போதும் அவர்கள் துணையிடம் அதிக கோபத்தை வெளிப்படுத்தும் தன்மையில் இருப்பார்கள்.

இவர்களுக்கு மற்றவர்களை புரிந்துக்கொள்ளும் தன்மை பெரியளவில் இருப்பதில்லை. அதனால் துணையின் மனநிலையை சரிவர புரிந்துக்கொள்ளாத காரணத்தால் திருமண உறவில் பாதிப்பை சந்திக்கக்கூடும்.