சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநிலாந்தில் அடுக்குமாடி கட்டடத் தொகுதியில் வசித்து வந்த இலங்கை இளம் குடும்பஸ்தர் அவர் வசித்து வந்த அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் 34 வயதான இளம் குடும்பஸ்தரே உயிரிழந்த நிலையில் இரு வெளிநாட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருகோணமலையை சொந்த இடமாக கொண்ட குறித்த இளைஞர் வடமராட்சி பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையும் உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் தமிழ் குடும்பஸ்தரின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பாக சூரிச் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக கூறப்படுகின்றது.