90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகைகளில் ஒருவர் சிம்ரன். இவர் விஜய், அஜித், கமல், ரஜினி என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு வெளிவந்த மகான், கேப்டன், ராக்கெட்ரி ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும் தற்போது அந்தகன், துருவ நட்சத்திரம், வணங்காமுடி என கைவசம் பல படங்களை வைத்துள்ளார்
நடிகை சிம்ரன் கடந்த 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கணவரின் தயாரிப்பில் நடிக்கும் சிம்ரன்
இந்த நிலையில் நடிகை சிம்ரன் தனது கணவரின் தயாரிப்பில் புதிதாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை லோகேஷ் குமார் என்பவர் இயக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
திகில் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகை சிம்ரன் கதையின் நாயகியாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. தி லாஸ்ட் ஒன் என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்திற்கான First லுக் போஸ்டரை சிம்ரன் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த போஸ்டர்..
Dear Media Friends, Fans & Well Wishers
Today marks the next transition of my career, with Deepak turning a producer
Thanks for your support always…🙏
Happy Ganesh Chathurthi ✨Unveiling “The Last One” 🔥@DeepakkCapt @fourdeeoffl @FilmmakerLokesh @onlynikil #SimsNext… pic.twitter.com/u2UOMxMq6g
— Simran (@SimranbaggaOffc) September 7, 2024