யாழில் வெடிகுண்டுடன் நபர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் வெடிகுண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து , சொகுசு கார், மோட்டார் சைக்கிள், 2 வாள்கள் மற்றும் உள்ளூர் தயாரிப்பு வெடிகுண்டு என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் ஐவரை தேடுகின்றது பொலிஸ்
யாழில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்டமை , வாகனங்களுக்கு தீ வைத்தமை , நெல்லியடி பகுதியில் புடவைக்கடை ஒன்றிற்கு பெற்றோல் குண்டு வீசியமை உள்ளிட்ட வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சந்தேகநபரின் வன்முறை கும்பலை சேர்ந்த மேலும் ஐந்து சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளனர் எனவும், அவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.