உலக அளவில் பிரபலமான இராசிக்கார்கள்!

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் இவர்களின் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த ஆண்கள் தங்களின் குழந்தைகள் மீது அதிக பாசம் கொண்டவர்களாகவும், குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்களின் அன்பு மற்றவர்கள் பார்த்து வியக்கும் அளவில் இருக்கும்.அப்படி உலகில் தலைசிறந்த தந்தைகளாக மாறும் ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே கடமை உணர்வு மற்றும் பொறுப்புணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்கள் தந்தையாக மாறும் பட்சத்தில் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இப்படி ஒரு தந்தை கிடைக்க மாட்டாரட்களா என மற்றவர்கள் பார்த்து ஏங்கும் அளவுக்கு இவர்கள் அக்கறையும் பாசமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மிதுனம்

மிதுன ராசியில் பிறந்த ஆண்கள் மிகவும் பொறுப்புணர்வு கொண்ட தந்தையாக இருப்பார்கள். இவர்கள் குழந்தைகளின் விளையாட்டு விடயங்களிலும் சரி கல்வி விடயங்களிலும் சரி அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். குழந்தைகளின் ஆசையை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்ல கூடிய ஆற்றல் இவர்களுக்கு இருக்கும். இவர்கள் குழந்தைகளை பொருத்த வரையில் மிகவும் சிறந்த தந்தையாக இருக்கின்றனர்.

கடகம்

கடக ராசியில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே குழந்தைகளை மிகவும் நேசிப்பவர்களாக இருப்பார்கள்.இவர்கள் தந்தையாக மாறும் பட்சத்தில் குழந்தைகளுடன் மிகவும் நெருக்கமான பிணைப்பை கொண்டவர்களாக இருப்பார்கள். குழந்தைகளுக்கு நல்ல நண்பனாகவும் நடந்துக்கொள்கின்றார்கள். குழந்தைகள் மீது இவர்கள் கொண்டிருக்கும் அதீத பாசம் மற்றவர்கள் பார்வைக்கு வியப்பாக இருக்கும்.

மகரம்
மகர ராசியில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே குடும்ப பொறுப்பு அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தந்தையாகும் போது இந்த பொறுப்புணர்ச்சியின் தீவிரத்தை குழந்தைகளின் மீது காட்டுகின்றார்கள். குழந்தைகளிடத்தில் மிகந்த அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் எப்போதும் அவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற தீவிர எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.