திரிஷா நயன்தாராவை ஓரங்கட்டிய ராஷ்மிகா

திரிஷா, நயன்தாரா..
சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயின்களாக நடித்து வரும் திரிஷா மற்றும் நயன்தாரா, பெண்களுக்கு முக்கியத்துவம் கதைகளை பெரும்பாலும் தேர்வு செய்து நடித்து வருகிறார்கள்.

சம்பளம்
இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா, சம்பள விஷயத்தில் நயன்தாரா, திரிஷாவை மிஞ்சிவிட்டார் என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகும் சிக்கந்தர் படத்தில் நடிக்க ராஷ்மிகா 15 கோடி சம்பளமாக கேட்டு இருக்கிறார்.

அதன் பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில், ரூ.13 கோடி அவருக்கு வழங்க தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. திரிஷா மற்றும் நயன்தாரா ஒரு படத்திற்கு ரூ.10 முதல் ரூ.12 கோடி வரை மட்டுமே சம்பளம் வாங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.