சீரியலில் மட்டுமல்ல சம்பளத்திலும் முன்னணியில் நிற்கும் சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை
சீரியல்கள் வீட்டில் உள்ள பெண்களை தாண்டி சமூக வலைதளங்கள் பயன்படுத்தும் அனைவருமே பார்க்க தொடங்கிவிட்டார்கள்.

இதனாலேயே தொலைக்காட்சிகளில் பல தொடர்கள் அடுத்தடுத்து ஒளிபரப்பாகின்றன. அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுகிறது சிறகடிக்க ஆசை சீரியல்.

இப்போது கதையில் மீனா, முத்து சொன்ன வார்த்தையால் மனம் உடைந்து காணாமல் போக விஜயா, மனோஜ், ரோஹினி தாண்டி அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.

ஆனால் இன்றைய எபிசோட் கடைசியில் மீனா வீட்டிற்கு வந்துவிட்டதாக காட்டப்பட்டுள்ளது.

சம்பள விவரம்
இந்த சீரியலில் நடிக்கும் அனைவருமே மக்களிடம் அதிகம் பிரபலம் ஆகிவிட்டார்கள்.

இதனால் அவர்களின் சம்பள விவரம் பெரிய அளவில் உள்ளது. சரி சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் நடிகர்களின் ஒருநாள் சம்பள விவரத்தை காண்போம்.

விஜயா- ரூ. 8000
அண்ணாமலை- ரூ. 8000
முத்து- ரூ. 12,000
மீனா- ரூ. 12,000
மனோஜ்- ரூ. 6000
ரோஹிணி- ரூ. 6000
ரவி- ரூ. 5000
ஸ்ருதி- ரூ. 5000