விஜய் டிவியின் முக்கிய சீரியல் நேரம் மாற்றம்

விஜய் டிவியில் இந்த வாரத்தோடு தமிழில் சரஸ்வதியும் சீரியல் நிறைவடைகிறது. அதனால் வரும் திங்கள் முதல் ‘வீட்டுக்கு வீடு வாசப்படி’ என்ற புது சீரியலை ஒளிபரப்ப இருக்கின்றனர்.

அதனால் மற்ற சீரியல்களின் நேரத்தை மாற்றி இருக்கிறது விஜய் டிவி. அது பற்றிய முழு விவரங்கள் இதோ.

நேரம் மாற்றம்
வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. அதனால் இனி மோதலும் காதலும் மாலை 6 மணிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.

புது சீரியல் எப்படி இருக்கப்போகிறது என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதனால் ரெஸ்பான்ஸ் எப்படி கிடைக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.