அதிபர் தேர்தலில் போட்டியிட தயாராகும் நீதி அமைச்சர்

எதிர்வரும் அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட தமக்கு பல கோரிக்கைகள் வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மகா சங்கரத்தினர் உட்பட அனைத்து மதத் தலைவர்களும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்தும் தன்னிடம் இந்த கோரிக்கையை முன்வைத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

அது குறித்து அனைத்து தரப்பினருடனும் ஏற்கனவே பேசி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான தீர்மானத்தை எடுக்க தயார்
அதன்படி எதிர்காலத்தில் அதற்கான பொருத்தமான தீர்மானத்தை எடுக்க தயாராக இருப்பதாக நீதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அஸ்கிரிய, மல்வத்து பீடாதிபதிகளை தரிசனம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.