ரெபல் படம் திரைவிமர்சனம்

ரெபல்
இசையமைப்பாளராகவும், ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டு இருக்கிறார் ஜி.வி. பிரகாஷ். இவர் நடிப்பில் இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் ரெபல். இப்படத்தை நிகேஷ் என்பவர் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து மலையாள திரையுலகின் சென்சேஷன் நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். இந்த நிலையில், இன்று வெளிவந்துள்ள ரெபல் படத்தை பார்த்த நபர்கள் கூறிய டிவிட்டர் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது. வாங்க படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாம்.

விமர்சனம்
80ஸ்களில் கேரளாவை பின்னணியாக வைத்து, மூணாறு தமிழ் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் பாலக்காடு கல்லூரியில் போராடும் அவல நிலையை இப்படத்தில் காட்டியுள்ளார்.

 

கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ் புரட்சிகரமான கல்லூரி மாணவராக அசத்தியுள்ளார். கதாநாயகி மமிதா பைஜூ அழகாவும் போதுமான நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். பாடல்கள் மற்றும் பின்னணி இசை சூப்பர்.

படத்திற்கு மிகப்பெரிய பலம் அருண் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை இளைஞர்களை கவரும் வண்ணம் சுவாரஸ்யமாக இயக்கியுள்ளார் இயக்குனர் நிகேஷ்.

மேலும் இப்படத்தை பார்த்த திரையுலக நட்சத்திரங்கள் அஜய் ஞானமுத்து, எம்.எஸ். பாஸ்கர், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோரும் இப்படத்தை பாராட்டி பேசியிருந்தார்கள்.