விண்வெளி வீரரை திருமணம் செய்த தனுஷ் பட நடிகை!

பிரபல நடிகை
மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் லீனா மோகன்.

1998ம் ஆண்டு சினேகம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் அதன்பின் மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்கள் நடித்துள்ளார். பின் அப்படியே தமிழ் பக்கம் தனுஷின் அனேகன் படத்தின் மூலம் வந்தார்.

இந்த படத்தில் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படத்திற்கு பிறகு விக்ரம் நடிப்பில் வெளிவந்த கடாரம் கொண்டான், நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ஓ2 போன்ற படங்களில் நடித்திருந்தார்.

80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சின்னத்திரை சீரியலிலும் நடித்திருக்கிறார்.

மறுமணம்
நடிகை லீனா 2004ம் ஆண்டு அபிலாஷ் குமார் என்பவரை திருமணம் செய்திருந்தார்.

பின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2012ம் ஆண்டு விவாகரத்து பெற்று தனது பெற்றோருடன் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் இவர் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறார்.

பிரசாந்த் பாலகிருஷ்ணன் அவர்கள் ககன்யான் விண்வெளி வீரர் ஆவார். இதோ அவர்களது புகைப்படம்,