வெற்றிமாறன் இயக்கிய சிறந்த படங்கள்

தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிகரமான ஒரு இயக்குனராக திகழ்ந்து வருகிறார் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று மக்கள் அதிலும் நடிகர் தனுஷ்- வெற்றிமாறன் காம்போ வெளிவந்த திரைப்படங்கள் எல்லாம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது.

தற்போது வெற்றிமாறனின் சிறந்த படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க…

பொல்லாதவன்
கடந்த 2007 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார் வெற்றிமாறன். கேங்ஸ்டர் கதை அம்சத்தில் உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து இருந்தனர். படத்தின் வெற்றி முக்கிய காரணமாக இருந்தது ஜிவி பிரகாஷின் இசை.

ஆடுகளம்
தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் வெளிவந்த படம் ஆடுகளம். சேவல் சண்டை மையப்படுத்தி உருவான இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இப்படத்திற்காக தனுஷுக்கு சிறந்த நடிகர் பிரிவில், வெற்றிமாறன் சிறந்த இயக்குனர் பிரிவில் தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

அசுரன்
தனுஷ் – வெற்றிமாறன் காம்போவில் வெளியான மற்றொரு அற்புதமான படைப்பு தான் அசுரன் திரைப்படம். இந்த நாவலின் கதையில் சில மாற்றங்களை செய்து, வெற்றிமாறன் இதை திரைக்கு கொண்டு வந்தார்.

கிளைமாக்ஸ் காட்சியில், “படிப்ப மட்டும் எடுத்துக்க முடியாது” என்று தனுஷ் வசனம் பெஸ்ட்டாக இருந்தது.

வடசென்னை
வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் கிங்ஸ்டர் படமாக உருவான வடசென்னை படம் இன்னும் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இருக்கிறது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் அப்டேட்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

ராஜன் கதாபாத்திரத்தில் தோன்றிய அமீர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வெகுவாக கவனத்தை ஈர்த்துவிட்டார்.

விசாரணை
எழுத்தாளர் எம்.சந்திரகுமாரின் லாக்கப் நாவலை அடிப்படையாகக் கொண்டு, வெற்றிமாறன் எழுதி இயக்கிய விசாரணை திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரித்திருந்தார்.

இப்படத்தில் தினேஷ், ஆனந்தி, சமுத்திரகனி, ஆடுகளம் முருகதாஸ் எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். திரைப்படம் தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத பொக்கிஷம்..

விடுதலை
விடுதலை கடந்த 2022 -ம் ஆண்டு காமெடி நடிகர் சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படம் வெளிவந்தது. இப்படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாகி இருந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக நடந்து வருகிறது.