இயக்குனர் ஆவதற்கு முன் தனக்கு சொந்தமான காருடன் அட்லீ

அட்லீ
ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இன்று உலகளவில் பிரபலமாகியுள்ளார் அட்லீ. இவர் இயக்கிய ஜவான் திரைப்படத்திற்கு இந்தியளவில் மட்டுமின்றி உலகளவிலும் விருதுகளை பெற்றுள்ளார்.

சமீபத்தில் நடந்த தாதாசாகேப் பால்கே விருது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதை கைப்பற்றினார். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் கூட வெளிவந்து இணையத்தில் வைரலானது.

அன்ஸீன் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் இயக்குனர் அட்லீயின் அன்ஸீன் புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இயக்குனர் ஆவதற்கு முன் தனக்கு சொந்தமான காருடன் அட்லீ எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது. இதை பார்க்கும் ரசிகர்கள் பலரும், அட்லீயின் வளர்ச்சியை பாருங்க என கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..