சாய் பல்லவியின் அந்த விஷயத்தை பார்த்து அசந்துபோன சமந்தா

சமந்தா
திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தற்போது இந்தியில் உருவாகி வரும் சிட்டாடல் எனும் வெப் தொடரில் நடித்து வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இந்த வெப் தொடரில் நடிப்பதற்காக ரூ. 10 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம்.

மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா, இந்த வெப் தொடரின் படப்பிடிப்பின் போது கூட சண்டை காட்சியில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. கடுமையான சண்டை காட்சியில் நடித்து முடித்துவிட்டு திடீரென கீழே விழுந்துவிட்டாராம். அதன்பின் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மேலும் தற்போது மயோசிடிஸ் நோயில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் சமந்தா, பழையபடி தொடர்ந்து படங்கள் நடிக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது. விரைவில் அவர் நடிக்கவுள்ள படங்களின் அறிவிப்பும் வெளியாகுமாம். இந்நிலையில், சமந்தா மற்றும் சாய் பல்லவி பற்றிய பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் உலா வருகிறது.

அசந்துபோன சமந்தா
சாய் பல்லவி நடனத்தில் நம்பர் 1 என்பவர் நாம் அறிவோம். இவர் பல நிகழ்ச்சியில் போட்டியிட்டுள்ளார். அப்படி சாய் பல்லவி போட்டியாளராக கலந்துகொண்ட நடன நிகழ்ச்சி ஒன்றில் சமந்தா சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.

அப்போது சாய் பல்லவியின் நடனத்தை பார்த்து அசந்துபோன சமந்தா, அவர் மீது வைத்த கண்ணை எடுக்கவே முடியவில்லை. அப்படியொரு நடனத்தை மேடையில் அரங்கேற்றினார் சாய் பல்லவி என சமந்தா கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..