விஜய்யுடன் இருக்கும் அந்த குழந்தை யார் தெரியுமா?

விஜய்
விஜய்க்கு எந்த அளவுக்கு ரசிகர் கூட்டம் இருக்கிறது என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அவருக்கு குழந்தைகள் ரசிகர்களும் அதிகம் உள்ளனர்.

விஜய் சினிமாவை விட்டு விலகுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல், சமீபத்தில் சிறுவன் ஒருவன் தன்னுடைய அம்மாவிடம், “ஏன் விஜய் நடிக்கமாட்டாரு?” என்று கண்கலங்கி கேள்வி கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய் சிறுவயதில், ஒரு குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

யார் தெரியுமா?
அந்த குழந்தை வேறு யாருமில்லை இப்போது பிரபல நடிகராக இருக்கும் விக்ராந்த் தான். இவர் விஜய்யின் நெருங்கிய உறவினர் ஆவர்.

தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள லால் சலாம் படத்தில் விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு பின் இவருக்கு பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.