விஜய்க்கு அடுத்து அரசியலுக்கு வருகிறாரா நடிகர் விஷால்

நடிகர் விஷால்
சினிமாவில் இருந்து அரசியல் வந்த பிரபலங்கள் பலர் உள்ளார்கள்.

தமிழ் சினிமா இல்லை எந்த மொழி சினிமா எடுத்தாலும் அதில் உள்ள பிரபலங்கள் அரசியல் வந்துள்ளார்கள். அப்படி தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், விஜயகாந்த், கமல்ஹாசன் என பலர் வந்தார்கள்.

அவர்களை அடுத்து இப்போது விஜய்யும் அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ளார். தற்போதைக்கு தனது கட்சி பெயர் அறிவிப்பை மட்டும் வெளியிட்டுள்ளார், அடுத்த அறிவிப்பு எப்போது வரும் என தெரியவில்லை.

விஷால் அறிக்கை
விஜய்யை தொடர்ந்து நடிகர் விஷால் அரசியலுக்கு வருவதாக சமூக வலைதளங்களில் பேச்சுகள் வந்தன. இந்த நிலையில் நடிகர் விஷால் திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், சமூகத்தில் எனக்கு இத்தனை ஆண்டுகளாக ஒரு நடிகனாக, சமூக சேவகனாக உங்களில் ஒருவனாக அந்தஸ்தும் அங்கீகாரமும் அளித்த தமிழக மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.

என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினேன், “இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு” என்ற நோக்கத்தில் நற்பணி இயக்கமாக செயல்படுத்தினோம்.

நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை, “நன்றி மறப்பது நன்றன்று” என்ற வள்ளுவனின் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை நான் செய்துக்கொண்டே தான் இருப்பேன். அது என்னோட கடமை என்று மனரீதியாக நாள் கருதுகிறேன்