விஜய் கட்சி தொடங்குவது குறித்து லீக்கான தகவல்

நடிகர் விஜய்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியாகி இருந்தது. அப்படம் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய கோலாகலமாக வெற்றி விழா எல்லாம் கொண்டாடினார்கள்.

தற்போது விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார், படத்திற்கு கோட் என பெயரும் வைத்துள்ளனர்.

வெளிநாட்டில் தொடங்கி பல இடங்களில் படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நேரத்தில் வெங்கட் பிரபு மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரின் சகோதரி பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதனால் கோட் படத்தின் படப்பிடிப்புகளை விஜய் ரத்து செய்திருக்கிறார்

அரசியல்
இந்த நிலையில் தான் விஜய் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து பரபரப்பான செய்திகள் வருகிறது. விஜய்யும் தனது அரசியல் கட்சி தொடங்குவது குறித்து மிகவும் சீக்ரெட்டாக விஷயங்கள் செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் தற்போது அரசியல் கட்சி பெயர், சின்னம் குறித்து தகவல் கசிந்து வருவது நடிகர் விஜய்யை டென்ஷனாக்கியிருப்பதாக தகவல்கள் வருகின்றனர்.

தேர்தலுக்கான பணிகளை ரகசியமாக செய்ய முக்கிய நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.