கோர விபத்தில் பலியான இராஜாங்க அமைச்சர் பிரேத பரிசோதனையில் வெளியான செய்தி!

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மார்பு மற்றும் இடது காலில் ஏற்பட்ட பலத்த காயங்களினால் உயிரிழந்துள்ளதாக கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையின் பிரதம வைத்திய நிபுணரான சட்ட வைத்தியர் ரமேஷ் அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

சனத் நிஷாந்தவின் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனையின் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சனத் நிஷாந்தவின் சடலத்தின் மீதான உட்புற மற்றும் வெளிப்புற பரிசோதனையின் பின்னர், அவரது சடலம் சகோதரர் மற்றும் நண்பர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

விபத்திற்கான காரணம்
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்திருந்தார்.

கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அவரது சொகுசு வாகனம், அதே திசையில் சென்ற கொள்கலனொன்றின் பின்பகுதியில் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த விபத்தில் இராஜாங்க அமைச்சர், அவரது பாதுகாப்பு அதிகாரி மற்றும் வாகனத்தின் சாரதி ஆகியோர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.