மைத்திரியின் மூத்த மகள் வீட்டில் திருடர்கள்!

தனது மூத்த மகள் வீட்டில் தங்கக் குதிரைகள் இருந்ததாக கூறப்படும் கதை பொய்யானது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதன்கிழமை (24) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

எனது மூத்த மகள் வீட்டில் திருடர்கள் புகுந்தனர். அந்த வீட்டிலிருந்து பால் பக்கற்றுகள் மற்றும் சில உணவுப் பொருட்களையும் பானங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

ஆனால், தங்கக் குதிரைகள் அந்த வீட்டில் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

அதோடு நூறு கோடி செலவு செய்து பொலன்னறுவையில் அருங்காட்சியகத்தை உருவாக்கினேன். மேலும் இந்த நாட்டில் எந்த ஜனாதிபதியும் அருங்காட்சியகம் கட்டவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.