வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுடன் உறவு கொள்ளும் வினோத மக்கள்

தெற்கு ஆப்பிரிக்கா நாடான நமீபியாவில் வாழும் ஹிம்பா பழங்குடியின மக்களிடம் விநோத பழக்கம் ஒன்று உள்ளதாம்.அதாவது வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுடன் பெண்கள் உடலுறவு கொள்ளவைக்கும் பழக்கம்தான் அது.

அதுவும் அந்த பெண்ணின் கணவர்களே வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு விரும்பி தமது மனைவிகளை தாரை வார்க்கின்றார்களாம். இந்த தகவல் நமக்கும் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி இருந்தாலும் இது அவர்கள் காலம் காலமாக கடைப்பிடித்து வருகின்றார்களாம்.

நமீபியா பழங்குடியினத்தவர்கள்
உலகில் எந்த இடத்தில் பிறந்தாலும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கலாசாரம், பண்பாடு ஒன்று உள்ளது. மக்களின் உணவு பழக்க வழக்கங்கள், வழிபாடு முறை, பண்டிகை கொண்டாட்டம், விருந்தோம்பல் உள்பட பல்வேறு விஷயங்களின் ஒவ்வொருவரின் வாழ்க்கை முறை என்பது தொடர்ந்து மாறுபட்டு வருகிறது.

அந்தவகையில் ஒரு பழங்குடியினத்தில் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை வரவேற்பதில் வித்தியாசமான முறை பின்பற்றப்பட்டு வருகிறது. பொதுவாக நம் வீட்டுக்கு உறவினர்கள் வந்தால் வாசலில் நின்று அவர்களை வரவேற்று வீட்டுக்குள் அழைத்து சென்று உணவு கொடுத்து உபசரிப்போம்.

விருந்தாளிகளுடன் பெண்கள் உடலுறவு
ஆனால் ஒரு பழங்குடியினத்தில் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுடன் பெண்கள் உடலுறவு வைத்து வரவேற்கும் நடைமுறை இன்று உள்ளது என்றால் நம்ப முடிகிறதா?. ஆம், இது முற்றிலும் உண்மை.

தற்போதைய மாறி வரும் கலாசாரத்தில் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களும் மலை மற்றும் மலை சார்ந்த பகுதிகளில் வசித்து வந்தாலும் நகரங்களில் வாழும் மக்களை போல் மாற தொடங்கிவிட்டனர்.

இருப்பினும் பல பழங்குடியினத்தவர்கள் இன்னும் கூட தங்களின் பழைய பழக்க வழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர். இந்த வித்தியாசமான வரவேற்பு கலாசாரம் தெற்கு ஆப்பிரிக்கா நாடான நமீபியாவில் வாழும் ஹிம்பா பழங்குடியின மக்களிடம் தான் வழக்கத்தில் உள்ளது. இவர்கள் ஒரு நாடோடி பழங்குடியினத்தவர்கள்.

ஒட்சிகிம்பா எனும் மொழியை பேசுகின்றனர். நமீபியாவின் குனென் எனும் இடத்தை சுற்றி இவர்கள் கூட்டமாக வசிக்கின்றனர். மொத்தம் 50 ஆயிரம் பேர் உள்ளனர்.

இந்த பழங்குடியினத்தை சேர்ந்த ஆண்கள் வேட்டையாடுவதை பிரதான தொழிலாக கொண்டுள்னர். பெண்கள் வீட்டில் உணவு சமைப்பது, வீடு, குழந்தைகளை பராமரிப்பதை தொழிலாக வைத்துள்ளனர்.

அதுமட்டுமல்ல இங்குள்ள ஆண்களும், பெண்கள் மேலாடை அணிவது இல்லை. இடுப்பில் மட்டும் விலங்குகளின் தோலால் ஆன பாவாடை போன்ற ஆடையை அணிகின்றனர்.

இரு திருமணம் செய்யும் ஆண்கள்

இந்த பழங்குடியினத்தில் ஆண்களிடம் பலதார மணம் என்பது நடைமுறையில் உள்ளது. இந்த இனத்தை சேர்ந்த ஆண்கள் குறைந்தபட்சம் 2 பெண்களை திருமணம் செய்து கொள்கின்றனர்.

இந்த பழங்குடியினத்தவர்களிடம் விருந்தோம்பல், உபசரிப்பு முறையில் தாராளம் காட்டப்படுகிறது. இதற்கு உதாரணம் என்னவென்றால் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு மனைவியையே அவர்களின் கணவர்கள் தாரை வார்க்கின்றனர். விருந்தாளிகளை நன்கு கவனிக்க வேண்டும் என்ற பழக்கம் வழக்கத்தை அவர்கள் பின்பற்றி வருகின்றனர்.


இது அங்குள்ள கலாசாரமாகவே பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த பழங்குடியினத்தில் உள்ள பெண்கள் பெற்றோர் மற்றும் கணவரின் வார்த்தைக்கு அதிக மதிப்பளிப்பார்கள்.

இதனால் தான் பெற்றோர் சொல்லும் நபரை அவர்கள் திருமணம் செய்வதோடு, கணவர் கூறும்போது விருந்தாளிகளை கவனிக்க உடலுறவும் வைக்கின்றனர்.

இது தற்போதைய காலத்திலும் நடைமுறையில் உள்ளதால் பெண்ணடிமைத்தனம் என பலரும் விமர்சிக்கின்ற போதும் ஹிம்பா பழங்குடியினத்தவர்கள் இன்றும் அந்த பழக்க வழக்கத்தை பின்பற்றி வருகின்றனராம்.