2024இல் உலகில் ஏற்பட இருக்கும் மாற்றங்கள்

16ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்த ஜோதிடர் நாஸ்ட்ராடாமஸ், எதிர்காலத்தை பற்றிய துல்லியமான குறிப்புகளை புதிர் வடிவில் எழுதியுள்ளதால் அவரை உலக மக்கள் மிகப்பெரிய தீர்க்கதிரிசியாக கருதுகின்றனர்.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்டு வாரியாக இவர் கணித்த பல விடயங்கள் இப்போது வரை நிகழ்ந்து வருகிறது.

இரட்டை கோபுர தாக்குதல், ஹிட்லரின் வளர்ச்சி மற்றும் உலக மகா யுத்தங்கள் போன்ற விடயங்கள் இவரின் கணிப்புகளில் பிரசித்தி பெற்றவை.

இது போன்ற பல விடயங்களை கணித்த நாஸ்ட்ராடாமஸின் 2024ஆம் ஆண்டுக்கான கணிப்புகள் வருமாறு,

காலநிலை பேரழிவுகள்

2024ஆம் ஆண்டில் காலநிலை பேரழிவுகள் அதிகமாக ஏற்படும் என நாஸ்ட்ராடாமஸ் அவரது குறிப்புகளில் கூறியுள்ளார்.

புவி வெப்பநிலையில் அதிகரிப்பு ஏற்பட்டு அதிகளவான நிலங்கள் வரட்சியை சந்திப்பதோடு பனிப்பாறைகள் உருகி வெள்ளப்பெருக்குகளும் ஏற்படும் என அவர் கணித்துள்ளார்.

மேலும், சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படுவதோடு, விவசாய பயிர்கள் நோய்த் தாக்கத்துக்குள்ளாகி உலகில் பட்டினி நிலைமை அதிகரிக்கும் எனவும் குறிப்புகளில் உள்ளது.

பாப்பரசர் பதவியில் மாற்றம்
வரவிருக்கும் ஆண்டில் பாப்பரசர் பதவியில் மாற்றம் ஏற்படும் என நாஸ்ட்ராடாமஸால் கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, போப் போப் பிரான்சிஸின் வயது மற்றும் உடல்நிலையின் காரணமாக பாப்பரசர் பதவிக்கு புதிதாக ஒருவரை நியமிக்கும் சாத்தியக்கூறு உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

புவிசார் அரசியலில் பதற்றம்
2024ஆம் ஆண்டில் சீனா மற்றும் அமெரிக்கா போன்ற பலம் பொருந்திய நாடுகளுக்கிடையில் நவீன யுகத்தின் பனிபோர்கள் ஏற்படக்கூடும் என நாஸ்ட்ராடாமஸால் கூறப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற நாடுகளின் கடற்படைகளுக்கிடையிலான யுத்தமும் அதிகரிக்கும் என அவரால் புதிர் வசனங்களின் மூலம் விவரிக்கப்பட்டுள்ளது.

நாஸ்ட்ராடாமஸின் கணிப்புகளின் படி வருகின்ற ஆண்டில் புவிசார் அரசியலில் ஒரு பதற்ற நிலை தொடரும் என பலரும் கூறி வருகின்றனர்.

அரசியல் புரிதல்
நாஸ்ட்ராடாமஸின் கணிப்புகளின் உண்மைத்தன்மை குறித்து பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் பலருக்கும் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றது.

எனினும், அவரின் கருத்துக்கள் கடத்த கால, சமகால மற்றும் எதிர்கால அரசியலில் ஒரு நுணுக்கமான பார்வையை உலக மக்களுக்கு எடுத்துரைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.