ஜப்பானை உலுக்கிய சுனாமி அலைகள்

ஜப்பானை பாரிய பூகம்பமொன்று இன்று( 7.6)தாக்கியதை தொடர்ந்துமுதலாவது சுனாமி அலைகள் தென்பட்டுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐந்து மீற்றர் நீளமான சுனாமி அலைகள் குறித்து எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இஸ்கிகவா பகுதியில் உள்ள மக்களைபாதுகாப்பான பகுதிகளிற்கு செல்லுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பூகம்பத்தை தொடர்ந்து இஸ்கிகவா பகுதியில் பல வீடுகள் தரைமட்டமாகியுள்ளன மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன.

அத்துடன் டோக்கியோவிற்கும்பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கும்இடையில் புகையிர போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.