துணிவு பட ரிலீசுக்கு பிறகு பெரிய இடைவெளி எடுத்துக்கொண்ட அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
மகிழ் திருமேனி இயக்கும் அந்த படத்தின் ஷூட்டிங் அசர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதில் அர்ஜுன், த்ரிஷா, பிக் பாஸ் ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர்.
ரிலீஸ் எப்போது?
இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் எப்போது என்கிற விவரம் வெளியாகி இருக்கிறது. அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி விடாமுயற்சி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகிறதாம். அதற்கு தகுந்தபடி தான் ஷூட்டிங் பணிகளும் நடைபெற்று வருகிறது.
அஜித் விடாமுயற்சி ஷூட்டிங் முடித்துவிட்டு ஏப்ரல் மாதித்திலேயே இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது அடுத்த படத்தை தொடங்க இருக்கிறார்.







