பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளரிடம் உறவில் இருக்கலாமா என கேட்ட விஷ்ணு !

பிக் பாஸ்
விறுவிறுப்புக்கு கொஞ்சம் கூட பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது பிக் பாஸ். நேற்று ஒளிபரப்பான எபிசோடில் போட்டியாளர்களுக்கு இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டது.

இதில் 5 ஸ்டார்களுக்காக வாக்குவாதம் செய்து வந்தனர். இறுதியில் இந்த 5 ஸ்டார்களையும் விக்ரம் வென்றார்.

போட்டிகள் ஒரு பக்கம் இருக்க பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் குறித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோ வெளியாகி கொண்டே தான் இருக்கிறது.

அந்த வகையில் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து முதல் வாரமே வெளியேறி பின், கடந்த சில வாரங்களுக்கு முன் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ள வந்தார்.

நாம் இருவரும் உறவில் இருக்கலாமா
இந்நிலையில், விஷ்ணு குறித்து அனன்யா பேசிய விஷயம் ஒன்று படுவைரலாகி வருகிறது. ஒரு முறை விஷ்ணு தன்னிடம் பேசியபோது ‘நாம் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கலாமா’ என கேட்டதாகவும் அதற்கான அனன்யா மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் இந்த வீடியோவில் கூறியுள்ளார்.

இதை விஷ்ணு ஒரு கேம் விளையாடுவதற்கான தந்திரமாக பயன்படுத்தி வருகிறார் என்று மற்ற போட்டியாளர்களும் இந்த வீடியோவில் கூறியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..