காசாவிலிருந்து சிக்கியுள்ள கனேடியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி!

காசாவிலிருந்து தாய் நாடு திரும்புவதற்கு மேலும் ஒரு தொகுதி கனடியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காசாவின் ராஃபா எல்லைப் பகுதி வழியாக இந்த கனடியப் பிரஜைகள் காசாவை விட்டு வெளியேற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 165 கனடியர்களுக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காசாவில் சிக்கியுள்ள வெளிநாட்டுப் பிரஜைகள் ராஃபா எல்லை வழியாக எகிப்து சென்றடைவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காசாவில் சிக்கியிருந்த கனடியர்கள் ஏற்கனவே ராஃபா வழியாக எகிப்தை சென்றடைந்து, தாய் நாடு திரும்பியுள்ளனர்.