யாழில் பாடசாலை மீது முறிந்து விழுந்த மரம்

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பாடசாலை ஒன்றின் வகுப்பறைமீது மரம் ஒன்று சாய்ந்துள்ளது.

பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, J/401 கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள யா/ சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் வகுப்பறை மீது பாடசாலையில் இருந்த அத்தி மரம் சார்ந்துள்ளது.

எனினும் இந்த அனர்த்தத்தினால் பாரியளவு சேதங்கள் எவையும் ஏற்படவில்லை. குறித்த மரத்தை வெட்டி அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் அண்மையில் பருத்திதுறையில் சீரற்ற காலநிலை காரணமாக கிணறு ஒன்று தாழிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.