லியோ படம் எப்படி இருக்கு.. வெளிவந்த முதல் விமர்சனம்

லியோ
வருகிற 19ஆம் தேதி லியோ ரிலீஸ் நாள் அன்று விஜய் ரசிகர்கள் அனைவருக்கும் தீபாவளி தான். பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் கண்டிப்பாக வெற்றியடையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வசூலிலும் புதிய சாதனைகளை படைக்க போகிறது. அதற்கு உதாரணமே ப்ரீ புக்கிங் வசூல் தான். இதுவரை உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே வசூல் செய்து புதிய சாதனையை பாக்ஸ் ஆபிஸில் படைத்துள்ளது.

முதல் விமர்சனம்
இந்நிலையில், வருகிற 19ஆம் தேதி வெளிவரவிருக்கும் லியோ படம் குறித்து முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. லியோ படத்தை பார்த்துவிட்டு பிரபல திரைப்பட விமர்சகரும், வெளிநாட்டு சென்சர் போர்டு உறுப்பினருமான உமைர் சந்து படத்தின் விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

இதில் ‘இது ஒரு அவுட் அண்ட் அவுட் விஜய் படம். ஆரம்பம் முதல் இறுதி வரை விஜய் பட்டையை கிளப்பி இருக்கிறார். கதைக்களம் மிகவும் எளிமையானதாக இருந்தாலும், படத்திலிருந்த ஆக்ஷன் காட்சிகள் மிரட்டுகிறது. டென்ஷன், ஆக்ஷன், எமோஷன் சரியாக ஒர்கவுட் ஆகியுள்ளது என்பது போல் லியோ படத்தின் முதல் விமர்சனத்தை தெரிவித்துள்ளார்

மேலும் இப்படத்திற்கு 5 மதிப்பெண்ணுக்கு 3.75 மதிப்பெண் கொடுத்துள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம் அக்டோபர் 19ஆம் தேதி மக்கள் மத்தியில் லியோ படத்திற்கு எப்படிப்பட்ட விமர்சனம் கிடைக்கப்போகிறது என்று.