இலங்கையில் மனித விற்பனையில் சீனப்பிரஜை

தாய்லாந்தில் தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி, சட்டவிரோத மனித வர்த்தகத்தில் ஈடுபட்டார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் சீனப் பிரஜை ஒருவர் (வயது 54) கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தக விசாரணை மற்றும் சமுர்த்தி குற்ற விசாரணை பிரிவுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பத்தரமுல்லை, பிரதேசத்தில் வைத்தே செவ்வாய்க்கிழமை (10) கைது இவர் செய்யப்பட்டார்.

தாய்லாந்தில் கணினி தகவல்கள் தரவேற்றல் மற்றும் நுகர்வோர் சேவை நிறுவனத்தில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி இலங்கை பிரஜைகள் சிலரிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை அவர் பெற்று மனித கடத்தலில் ஈடுபட்டமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.