இஸ்ரேலில் இருந்து வெளியேற விரும்பும் இலங்கையர்களுக்கான செய்தி!

இஸ்ரேலிற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே மோதல் நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இஸ்ரேலை விட்டு நாடு திரும்ப விரும்பும் இலங்கை பணியாளர்களுக்கு அதற்கான வாய்ப்பு காணப்படுவதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

மூன்று விமானங்கள் இஸ்ரேலில் இருந்து கொழும்புக்கு
அதன்படி , துபாய், அபுதாபி மற்றும் பஹ்ரைன் வழியாக தினமும் மூன்று விமானங்கள் இஸ்ரேலில் இருந்து கொழும்புக்கு இயக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் , இஸ்ரேலிய மக்கள் தொகை, குடியேற்ற அதிகாரசபை மற்றும் வௌியுறவு அமைச்சின் அனுமதி பெறப்பட்ட பின்னர் மாத்திரம், இனிவரும் காலங்களில் இஸ்ரேலிய தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே மோதல் நடைப்பெற்றுவதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா குறிப்பிட்டார்.

மேலும் இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கைப் பணியாளர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.