ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ரம்யா கிருஷ்ணன்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

30 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் கலக்கிவரும் ரம்யா கிருஷ்ணன் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் கலக்கிய ரம்யா கிருஷ்ணன் சன் டிவியில் ஒளிபரப்பான தங்க வேட்டை நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கலக்கினார்.

பின் கலசம், தங்கம், வம்சம் போன்ற தொடர்களில் தொடர்ந்து நடித்து வந்தார். அண்மையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ரஜினியுடன் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சொத்து மதிப்பு
படு பிஸியாக படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், நிகழ்ச்சிகள் என கலக்கிவரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் சொத்து மதிப்பு ரூ. 98 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.