ரஜினியின் ஜெயிலர் படத்திற்காக சிவராஜ்குமார் வாங்கிய எவ்வளவு தெரியுமா?

ரஜினியின் ஜெயிலர்
அண்ணாத்த படத்தில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்க தவறிய ரஜினிகாந்த் அடுத்து நடித்த திரைப்படம் தான் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர்.

படம் படு பிரம்மாண்டமாக ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிவிட்டது, FDFSவில் இருந்தே படத்திற்க நல்ல விமர்சனம் வந்து கொண்டிருக்கிறது.

இப்படம் முதல் நாளில் மட்டுமே உலகம் முழுவதும் ரூ. 100 கோடிக்கு மேவ் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம், தமிழகத்தில் மட்டும் ரூ. 25 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

படத்திற்கான விமர்சனம் நல்ல விதத்தில் வந்துள்ளதால் இப்படம் மூலம் புதிய பாக்ஸ் ஆபிஸ் சாதனை ரஜினி படைப்பார் என கூறப்படுகிறது.

சிவராஜ்குமார்
இந்த படத்தில் இந்திய சினிமா பிரபலங்கள் பலர் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளனர். கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ஜெயிலர் படத்தில் நடிப்பதற்காக மட்டுமே சிவராஜ்குமார் ரூ. 4 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.