கணவரின் கொடுமை, விவாகரத்து செய்த மின்சார கண்ணா பட நடிகை மோனிகா

மின்சார கண்ணா
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 1999ம் ஆண்டு வெளியான திரைப்படம் மின்சார கண்ணா.

விஜய், ரம்பா, குஷ்பு போன்ற பலர் நடித்துள்ள இப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக மோனிகா காஸ்ட்லினோ நடித்தார்.

மும்பையைச் சேர்ந்த இவர் ஆரம்பத்தில் ஹிந்தி படங்களில் நடித்து வந்தார். ஆரம்பத்தில் ஹிட் படங்களில் நடித்து அங்கீகாரம் பெற்றாலும் டாப் நாயகியாக வரவில்லை.

குடும்பம்
இவர் 2010ம் ஆண்டு துணை இயக்குனரான சத்ய பிரகாஷ் சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆன 1 வருடத்திலேயே விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள்.

விவாகரத்திற்கு பின் படங்களில் நடிக்க வாய்ப்பு வராததால் சின்னத்திரை பக்கம் சென்றுள்ளார். 2009ம் ஆண்டு சீரியலில் நடிக்க தொடங்கிய மோனிகா தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்.