திருச்சியில் உள்ள கருமண்டபம் என்ற பகுதியில் பல ஆண்டுகளாக விபச்சாரம் நடந்து வருவதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இதையடுத்து தொடர் விசாரணை நடத்தி வந்த போலீசார், சிங்கராயர் நகரில் உள்ள தி ஷைன் என்ற ஸ்பாவில் சோதனை நடத்தினர்.
அப்போது ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடித்தி வருவது தெரியவந்துள்ளது. இந்த ஸ்பாவின் ஓனராக இருந்து வந்த விஜய் மக்கள் மன்ற செயலாளர் செந்தில்குமாரை தற்போது விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே அவர் நடத்தி வந்த விபச்சார விடுதியில் 2 பெண்கள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.