ரசிகர்களால் கோபமடைந்த ஆர்யா

ஆர்யா
நடிகர் ஆர்யா தற்போது காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில் நடித்து இருக்கிறார். அதன் ப்ரோமோஷனுக்காக பல ஊர்களுக்கு சென்று நிகழ்ச்சிகளில் ஆர்யா கலந்து கொண்டு வருகிறார். அவருடன் நடிகை சித்தி இத்னானியும் கலந்துகொண்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் சேலம் பகுதியில் இருக்கும் மால் ஒன்றில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது. ஆர்யாவை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி இருந்தனர்.

வெளியேறிய ஆர்யா
நிகழ்ச்சியில் ஆர்யா பேசிக்கொண்டிருந்த நிலையில் அதிகம் பேர் அவருதான் செல்பி எடுக்க முற்பட்டனர். அதனால் அங்கு நெரிசல் ஏற்பட்டது.

பாதுகாக்பை மீறி பலரும் மேடையில் ஏறியதால் கோபமடைந்த ஆர்யா அங்கிருந்து வெளியேறிவிட்டார். அதற்கு பிறகு ஆர்யா மீண்டும் வருவார் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி இருக்கிறது.