தொகுப்பாளினி டிடி
தமிழ் சின்னத்திரையில் 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி. இளம் வயதில் தொகுப்பாளினியாக ஆரம்பித்த அவரது பயணம் இப்போது வரை வெற்றிகரமாக இருந்து வருகிறது.
விஜய்யில் ஏகப்பட்ட ஹிட் ஷோக்கள், பிரபலங்களின் Concert, தனியார் நிகழ்ச்சிகள், இசை, டிரைலர் வெளியீடு என தொடர்ந்து தனது தொகுப்பாளினி வேலையை செய்துகொண்டு இருக்கிறார்.
அண்மையில் காலில் ஏற்பட்ட பிரச்சனையால் அதிக நிகழ்ச்சிகளில் வராமல் இருந்த டிடி இப்போது மீண்டும் கலக்கி வருகிறார்.
DDStyles மூலம் தனியாகவும் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
புதிய ஷோ
தற்போது தொகுப்பாளினி டிடி ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.
அதாவது அவர் மீண்டும் விஜய் டிவியில் ஒரு சூப்பரான ஷோ தொகுத்து வழங்க இருக்கிறாராம். அது வேறு எந்த நிகழ்ச்சியும் இல்லை, அவர் இதற்கு முன் நடத்திய என்கிட்ட மோதாதே நிகழ்ச்சி தானாம்.
ஆனால் நிகழ்ச்சி எப்போது ஆரம்பமாக போகிறது, எப்படி இருக்கப்போகிறது என்பது எல்லாம் தெரியவில்லை.
View this post on Instagram