கேன்ஸ் பட விழாவில் புடவையில் நடிகை குஷ்பு

பிரான்சில் உலக புகழ்பெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா தொடங்கியுள்ளது. இந்த விழா வருகிற 27-ந்தேதி வரை நடக்கிறது. இதில் உலகில் பல்வேறு மொழிகளில் வெளியான சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்தியாவில் இருந்து அனுராக் காஷ்யப் இயக்கிய கென்னடி, ராகுல்ராய் நடித்த ஆக்ரா, மணிப்பூரில் 1990-ல் வெளியான இஷானோ ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.

இந்த விழாவில் கலந்து கொள்ள மத்திய மந்திரி எல்.முருகன் தலைமையில் பட குழுவினர் சென்றுள்ளனர். நடிகை குஷ்புவும் இந்திய பிரதிநிதியாக பங்கேற்றார். இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு நடிகை குஷ்பு கையால் நெய்யப்பட்ட காஞ்சீவரம் புடவையை உடுத்தி சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.