கோபியை அடுத்து பாக்கியலச்சுமி சீரியலை விட்டு விலகும் மற்றுமோர் பிரபலம்

பாக்கியலட்சுமி தொடரில் கோபியாக நடித்து வந்த சதிஷ் தற்போது அந்த தொடரில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு படத்தில் யார் இனி கோபியாக நடிக்க போவது என்பது தான் தற்போது ரசிகர்களிடம் இருக்கும் பெரிய எதிர்பார்ப்பு.

இந்நிலையில் தற்போது இன்னொரு நடிகரும் பாக்யலட்சுமியில் இருந்து விலகி இருக்கிறார்.

அவருக்கு பதில் இவர்
கோபி கதாபாத்திரத்தின் நண்பர் ரோலில் நடித்து வந்த நடிகர் தான் விலகி இருக்கிறார். கோபி தன் பர்சனல் விஷயங்களை கூறி அட்வைஸ் கேட்டும் நபராக அந்த கதாபாத்திரம் இருக்கும்.

நடிகர் அரவிந்த் தற்போது அந்த ரோலில் நடிக்க தொடங்கி இருக்கிறார். வழக்கம் போல ‘அவருக்கு பதில் இவர்’ என குறிப்பிட்டு நேற்றைய எபிசோடில் காட்சி வந்திருக்கிறது.

புது கோபி வரும் காட்சிகள் அடுத்த வாரம் தான் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.