முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்ரோர் சீரியல்

விஜய் டிவியில் பல பிரபலமான சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. தற்போது கிழக்கு வாசல் என்ற புதிய சீரியல் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த சீரியலில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் முக்கியமான ரோலில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது.

மேலும் இதில் சஞ்சீவ் கமிட் ஆகியிருந்தார். ஆனால் சில காரணங்களால் இவர் வெளியேறினார். இவருக்கு பதிலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் வெங்கட் நடிக்கப்போவதாக கூறப்பட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வெங்கட் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும்போது எவ்வாறு புதிய சீரியலில் நடிக்க முடியும் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தார்கள்.

இந்நிலையில் இது குறித்து பேசிய வெங்கட், “பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. ஜூன் மாதத்திற்குள் முடிந்து விடும். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிவதற்கும் புதிய சீரியல் தொடங்குவதற்கும் சரியாக இருக்கும்” என்று கூறியுள்ளனர்.