சிவகார்த்திகேயனின் அயலான் பட அப்டேட்

சிவகார்த்திகேயனின் அயலான்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக பிரின்ஸ் திரைப்படம் வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து வேறு எந்த படமும் வெளியாகவில்லை.

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிக்க படம் சூப்பராக தயாராகி இருந்தது. ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் தயாரான இப்படம் ரிலீஸிற்கு மட்டும் தாமதமாகி இருந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தை பற்றிய சூப்பரான தகவல் வெளியாகி இருப்பதாக படக்குழு அறிவித்தார்கள். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் அயலான் படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறதாம்.