இரண்டாவது குழந்தையுடன் வைரலாகும் நடிகர் கின்னஸ் பக்ரு

தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து இருப்பவர் கின்னஸ் பக்ரு. அவரது உயரத்தை வைத்தே பல படங்களில் நகைச்சுவையாக நடித்து இருப்பார். டிஷ்யூம், காவலன், 7ம் அறிவு உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார்.

சமீபத்தில் பிரபுதேவா நடிப்பில் ரிலீஸ் ஆன பஹீரா படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்தார் அவர்.

குடும்ப போட்டோ
கின்னஸ் பக்ருவுக்கு ஏற்கனவே 17 வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில் சில வாரங்களுக்கு முன்பு இரண்டாவது குழந்தை பிறந்தது. அவருக்கு அப்போது வாழ்த்துக்கள் குவிந்தது.

தற்போது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உடன் இருக்கும் குடும்ப போட்டோவை பக்ரூ வெளியிட்டு இருக்கிறார். அது வைரல் ஆகி வருகிறது.