நடிகர் சூரியாவின் 42-வது படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இதில் பாலிவுட் முன்னணி நடிகை திஷா பட்டாணி நடித்து வருகிறார்.
இப்படம் 3டிநுட்பத்தில் மிக 100 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. மேலும் இப்படத்தை 10 மொழிகளில் வெளியிடுவதாக அறிவித்தனர். இப்படம் சூர்யா கேரியரில் முக்கிய படமாக இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு
சூரியாவின் 42-வது படத்திற்க்கு தற்போது வரை தலைப்பு வெளியிடவில்லை. இந்நிலையில் இப்படத்திற்கு வீர் அல்லது அக்னீஸ்வரன் பட தலைப்பாக வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வரவில்லை.