இன்றைய ராசிபலன்23.03.2023

மேஷம்

மேஷம்: குடும்பத்தினர் மனம் விட்டு பேசுவது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். உறவினர், நண்பர்களுடன் வீண் விவாதம் வந்து போகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். கவனம் தேவைப்படும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: உங்கள் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பயணங்களால் ஆதாயம் உண்டு. நம்பிக்கையாக கூறிவிட்டு கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

மிதுனம்

மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

கடகம்

கடகம்: கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள் எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான‌ நாள்.

சிம்மம்

சிம்மம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. யாரையும் நம்பி பொறுப்பை ஒப்படைக்காதீர்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். பொறுமை அதிகம் தேவைப்படும் நாள்.

கன்னி

கன்னி: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவி வழியில் மதிப்பு கூடும். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். உங்கள் திறமைகள் வெளிப்படும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களால் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.

தனுசு

தனுசு: எதிர்ப்புகள் அடங்கும். தாய் வழி உறவினர்களால் வீண் டென்ஷன் வந்து செல்லும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உங்களின் தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

மகரம்

மகரம்: திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். தைரியம் கூடும் நாள்.

கும்பம்

கும்பம்: கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். சகோதர வகையில் நன்மைகள் உண்டு. சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

மீனம்

மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் அது தவறாக போய் முடியும். நண்பர்கள் உறவினர்களுடன் வரம்பு மீறிப் பேச வேண்டாம். வாகனத்தில் எரிபொருள் இருக்கிறதாஎன பார்த்துவிட்டு புறப்படுங்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். நிதானம் தேவைப்படும் நாள்.