பதக்கங்களை குவிக்கும் நடிகர் மாதவன் மகன்

மாதவன்
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் சாக்லேட் பாய் என அழைக்கப்படும் நடிகர்களில் ஒருவர் மாதவன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ராக்கெட்ரி. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

நடிகர் மாதவனுக்கு வேதாந்த் மாதவன் எனும் ஒரு மகன் இருக்கிறார். மாதவனின் மகன் வேதாந்த் இந்தியளவிலும், சர்வேதேச அளவிலும் நடக்கும் நீச்சல் போட்டியில் பங்கேற்று வருகிறார்.

தங்க பதக்கங்கள்
அந்த வரிசையில் சமீபத்தில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்துகொண்ட வேதாந்த் மாதவன் மூன்று தங்க பதக்கங்களையும், இரண்டு வெள்ளி பதக்கங்களையும் வென்றுள்ளார்.

இந்த செய்தியை மிகவும் மகிழ்ச்சியுடன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் நடிகர் மாதவன். திரையுலக நட்சத்திரங்களும், ரசிகர்களும் வேதாந்த் மாதவனுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.