வசூல் வேட்டை நடாத்தும் ஷாருக்கானின் பதான்

பதான் திரைப்படம்
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பல வருடங்களுக்கு பிறகு ஷாருக்கானின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பதான்.

தீபிகா படுகோன் நாயகியாக நடிக்க ஜான் ஆபிரகாம் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படம் கடந்த ஜனவரி 25ம் தேதி வெளியானது.

படம் ரிலீஸிற்கு முன் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் வெளியான பிறகு வசூலில் மாஸ் காட்டி வருகிறது.

பட வசூல்
படம் மொத்தமாக இதுவரை ரூ. 900 கோடி வரை வசூலித்துள்ளதாம். ஹிந்தியில் யஷ் நடித்த கே.ஜி.எப் திரைப்படம் ரூ. 435 கோடி வசூலித்து முதல் இடத்தில் இருந்தது.

தற்போது இப்பட சாதனையை முறியடித்து ரூ. 436 கோடி வசூலித்து முதல் இடத்தை பிடித்துள்ளது ஷாருக்கானின் பதான்.

விரைவில் ரூ.1000 கோடி கலெக்‌ஷனை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது,