முடிவுக்கு வந்தது பாரதி கண்ணம்மா சீரியல்

பாரதி கண்ணம்மா
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த நான்கு வருடங்களாக ஓடிக்கொண்டிருந்த நிலையில் இன்று முடிவு பெற்று இருக்கிறது. மொத்தம் 1036 எபிசோடுகள்ஓடி முதல் சீசன் முடிவு பெற்று இருக்கிறது.

பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொள்வது போலவும் அதில் பாக்கியலட்சுமி உள்ளிட்ட மற்ற சீரியல் பிரபலங்கள் வந்து வாழ்த்துவது போலவும் தான் காட்சிகள் வந்திருக்கிறது.

கிளைமாக்ஸ் போட்டோ
மொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்துவிட்ட நிலையில், இறுதியில் ‘சுபம்’ என போட்டு பாரதி கண்ணம்மா தொடரை முடித்து இருக்கிறார் இயக்குனர்.

அதே நேரத்தில் பாரதி கண்ணம்மா 2ம் சீசன் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன் ப்ரோமோவும் இன்றைய எபிசோடில் வர இருக்கிறது.