நுரையீரலை காக்கும் ‘சில’ உணவுகள்!

ஆரோக்கியமான நுரையீரலுக்கான உணவு: ஆரோக்கியமான உடலுக்கு நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம். தற்போதைய வாழ்க்கை முறை, புகை பழக்கம்,காற்று மாசுபாடு, போன்றவற்றினால், நுரையீரலில் அழுக்குகளும் நச்சுக்களும் சேர்வதால், நுரையீரல் பலவீனமடைகிறது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படக் கூடும். அதனை அலட்சியம் செய்தால், ஆஸ்துமா, நிமோனியா, நுரையீரல் புற்றுநோய், நுரையீரல் தொற்று மற்றும் நுரையீரலில் நீர் நிரம்புதல் போன்ற கடுமையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

நுரையீரல் பாதிப்பு காரணமாக சுவாசிப்பதில் சிரமம் இருக்கும் நிலையில், இந்த பிரச்சனை மிகவும் அதிகரித்தால் உயிரையும் இழக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கும் சுவாசக் கோளாறு இருந்தால் அல்லது சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், கண்டிப்பாக உங்கள் உணவில் சிலவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை இங்கே கூறுவோம்?

நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க, தினமும் இவற்றை உட்கொள்ளுங்கள்

வெல்லம்

வெல்லம் நுரையீரலை உள்ளே இருந்து சுத்தம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருள் உணவியல் நிபுணர் கூறுகின்றனர். உங்கள் நுரையீரலில் சிக்கிக்கொள்ளக் கூடிய கார்பன் துகள்களை அகறும் திறன் இதற்கு உள்ளது. இது நுரையீரலில் சேரும் மாசுகளை வெளியேற்றுகிறது. மூச்சுக்குழாய் அழற்சி, மூச்சுத்திணறல், ஆஸ்துமா மற்றும் பிற சுவாசக் கோளாறுகளிலிருந்தும் உங்களைப் பாதுகாக்கும்.

அமிழ்தவள்ளி அல்லது சீந்தில் என அழைக்கப்படும் மூலிகையான கிலோய் (Giloy) ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் மூலிகை. இது பல நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் நுரையீரலை வைரஸ் நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. எனவே, உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், நீங்கள் தினமும் கிலோயை உட்கொள்ளலாம். இதனை கஷாயம் செய்து பயன்படுத்தலாம். தற்போது கிலோய் ஜூஸ் வடிவில் மருந்து கடைகளிலும் கிடைக்கிறது.

மஞ்சள்

சமையலறையில் இருக்கும் மஞ்சள் பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது. ஏனெனில் இதில் பல நோய்களை குணப்படுத்தும் ஆன்டி – செப்டிக் பண்புகள் உள்ளன. மறுபுறம், மஞ்சள் ஆன்டி-வைரல் ஆகும். இது நமது நுரையீரலை தொற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது. எனவே, உங்கள் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், மஞ்சள் பால் தினமும் குடிக்கத் தொடங்குங்கள். அதை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் நுரையீரல் வலுவடைகிறது.